/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருத்தங்கல் கண்மாய் கரை சுகாதார வளாகத்தை இடித்த அதிகாரிகள் திருத்தங்கல் கண்மாய் கரை சுகாதார வளாகத்தை இடித்த அதிகாரிகள்
திருத்தங்கல் கண்மாய் கரை சுகாதார வளாகத்தை இடித்த அதிகாரிகள்
திருத்தங்கல் கண்மாய் கரை சுகாதார வளாகத்தை இடித்த அதிகாரிகள்
திருத்தங்கல் கண்மாய் கரை சுகாதார வளாகத்தை இடித்த அதிகாரிகள்
ADDED : மே 17, 2025 11:57 PM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கண்மாய் கரையில் இருந்த பொது சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், வருவாய்த் துறையினர் சுகாதார வளாகத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில் நம்ம டாய்லெட் திட்டத்தில் கட்டப்பட்ட ஆண்கள் ,பெண்களுக்கான பொது சுகாதார வளாகம் நீர்நிலை பகுதியில் அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி இடித்து அப்புறப்படுத்த வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர். மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமாக சுகாதார வளாகத்தை இடிக்கும் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
மே 6 ல் சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்த நிலையில், திமுக கவுன்சிலர் துரைபாண்டி தீக்குளிக்க முயன்றதால் இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. இதையடுத்து கவுன்சிலர் துரைபாண்டி மீது தற்கொலை முயற்சி மற்றும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இரு நாட்கள் கழித்து இரவில் சுகாதார வளாகத்தின் ஒரு பகுதியை வருவாய்த்துறையினர் இடித்த நிலையில் கவுன்சிலர்கள் மற்றும்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். மாற்று ஏற்பாடு செய்யப்பட்ட பின் சுகாதார வளாகம் இடிக்கப்படும் என கூறிய நிலையில், நேற்று முன்தினம் இரவு வருவாய்த் துறையினர் சுகாதார வளாகத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.
திருத்தங்கல் பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் பொது சுகாதார வளாகத்தை மாற்று ஏற்பாடு செய்யாமல் முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் இடித்து அகற்றியது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.