ADDED : ஜன 01, 2024 05:03 AM
விருதுநகர்; விருதுநகரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தங்கமாரியப்பன், தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் சதாசிவம் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிறு வணிகர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பெயர் பலகயை வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலம் தேசப்பந்து மைதானத்தில் துவங்கி பஜார் வழியாக நகராட்சி அலுவலகம், எம்.ஜி.ஆர்., சிலையில் முடிந்தது.