/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நீரோட்டம் குறைந்து விட்ட அர்ஜூனா நதி கரையை மூடுது கருவேல மரங்கள்நீரோட்டம் குறைந்து விட்ட அர்ஜூனா நதி கரையை மூடுது கருவேல மரங்கள்
நீரோட்டம் குறைந்து விட்ட அர்ஜூனா நதி கரையை மூடுது கருவேல மரங்கள்
நீரோட்டம் குறைந்து விட்ட அர்ஜூனா நதி கரையை மூடுது கருவேல மரங்கள்
நீரோட்டம் குறைந்து விட்ட அர்ஜூனா நதி கரையை மூடுது கருவேல மரங்கள்
ADDED : ஜன 28, 2024 06:59 AM

விருதுநகர், :விருதுநகர் வரும் அர்ஜூனா நதியில் நீரோட்டம் குறைந்து விட்டதால் கருவேல மரங்கள் கரையை மூடி ஆற்றின் வழித்தடத்தையும் மூடுகிறது.
மாவட்டத்தில் 2023ல் அதிகளவு பருவமழை பெய்ததன் எதிரொலியாக அனைத்து அணைகள், கண்மாய்கள் நிரம்பின. ஆனால் ஆறுகளோ நீரை கடத்தும் ஒரு கால்வாய் போலவே செயல்பட்டன. அதற்கு விருதுநகர் கவுசிகா நதி, அர்ஜூனா நதி, குண்டாறு ஆகியவை உதாரணம்.
அர்ஜூனா நதி வத்திராயிருப்பில் துவங்கி நீரோட்டத்துடன் வந்தாலும் சிவகாசி, ஆனைக்குட்டம், விருதுநகர், பட்டம்புதுார், கோல்வார்பட்டி வரை அர்ஜூனா நதி ஓடுகிறது. இதில் சிவகாசியில் இருந்து விருதுநகர் வரை ஓடும் அர்ஜூனா நதியில் தற்போது நீரோட்டம் குறைந்து வருகிறது.
இந்த வழித்தடத்தில் முன்பிருந்தே பெருகி இருந்த கருவேல மரங்கள், தற்போது வரும் நீரோட்டத்தை முடக்கி கரையை மூடி வழித்தடத்தை அழிக்கும் அளவுக்கு ஆக்கிரமிக்க துவங்கி உள்ளன. இது நாளடைவில் நீரோட்டத்தை வேறு திசைக்கு மாற்றி குடியிருப்பில் வெள்ளம் புகுந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது.
மாவட்டத்தில் நீர்நிலைகளின் வறண்ட பகுதிகளில் கருவேலம் ஆக்கிரமிப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். நீர் தேக்கும் திறனை அதிகரிக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.