/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வாங்கியும் பயனில்லை: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய எக்ஸ்ரே மிஷின்கள்: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் நோயாளிகள் தவிப்பு வாங்கியும் பயனில்லை: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய எக்ஸ்ரே மிஷின்கள்: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் நோயாளிகள் தவிப்பு
வாங்கியும் பயனில்லை: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய எக்ஸ்ரே மிஷின்கள்: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் நோயாளிகள் தவிப்பு
வாங்கியும் பயனில்லை: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய எக்ஸ்ரே மிஷின்கள்: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் நோயாளிகள் தவிப்பு
வாங்கியும் பயனில்லை: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய எக்ஸ்ரே மிஷின்கள்: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் நோயாளிகள் தவிப்பு
ADDED : ஜூலை 01, 2025 02:16 AM

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு அனைத்து பகுதிகளில் இருந்து வரும் உள், வெளி நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு தினசரி வெளிநோயாளிகள் 2 ஆயிரம் பேர் வந்து சிகிச்சை, பரிசோதனை செய்கின்றனர்.
இவர்களில் தினசரி 200க்கும் மேற்பட்டோருக்கு ரூ. 50 கட்டணத்தில் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. மேலும் எக்ஸ்ரே பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரூ. 80 லட்சத்தில் 4 எக்ஸ்ரே மிஷின்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மூலமாக வாங்கப்பட்டது. இந்த மிஷின்களை அதற்கான அறைகளில் பொருத்தி முழு செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக எலக்ட்ரிக்கல், தரைதளம் அமைத்தல் உள்பட தேவையான பல்வேறு பணிகள் பொதுப்பணித்துறையினரால் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பணிகளை முறையாக செய்து முடிக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் புதிய 4 மிஷின்களை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் மாதக்கணக்கில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட மிஷின்கள்பயன்படுத்த முடியாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்கும் போது எல்லாம் பணிகளை விரைந்து முடித்து விடுகிறோம் என்பதை மட்டுமே பொதுப்பணித்துறையினர் பதிலாக தெரிவிக்கின்றனர். ஆனால் கூறியபடி முறையாக பணிகளை முடிக்காததால் எக்ஸ்ரே மிஷின்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே மிஷின்களை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டுவர தேவையான பணிகளை செய்யும் பொதுப்பணித்துறையினர் உடனடியாக பணிகளை செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) செயற்பொறியாளர் செந்துார் ராஜா கூறியதாவது: அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் எக்ஸ்ரே மிஷின்களை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு தேவையான பணிகள் நடக்கிறது. இப்பணிகள் இரு நாட்களில் விரைந்து முடிக்கப்படும், என்றார்.