ADDED : பிப் 11, 2024 12:37 AM
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மின்னணுவியல், தொலை தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார்,விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
டீன் மாரிசாமி வாழ்த்தினார். மின்னணுவியல் துறை தலைவர் வளர்மதி வரவேற்றார். விருது நகர் பி.எஸ்.என்.எல்., இளநிலை தொலை தொடர்பு அலுவலர் கேசவன் பேசினார். தொடர்ந்து கல்லுாரியில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பேப்பர் பிரசன்டேஷன், டெக்னிக்கல் குவிஸ், போஸ்டர் பிரசன்டேஷன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.