ADDED : ஜூலை 03, 2025 03:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மருத்துவர் தின விழா பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது.
இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாண்டிஸ்வரி முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் விஜுஆண்டோ பிரபு, கிரேஸ், மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு உடல்நலம், உணவு பழக்கம் குறித்து பேசினர்.விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.