/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முருக பக்தர்கள் மாநாட்டில் அசம்பாவிதம் அரசு மீது நயினார் நாகேந்திரன் சந்தேகம் முருக பக்தர்கள் மாநாட்டில் அசம்பாவிதம் அரசு மீது நயினார் நாகேந்திரன் சந்தேகம்
முருக பக்தர்கள் மாநாட்டில் அசம்பாவிதம் அரசு மீது நயினார் நாகேந்திரன் சந்தேகம்
முருக பக்தர்கள் மாநாட்டில் அசம்பாவிதம் அரசு மீது நயினார் நாகேந்திரன் சந்தேகம்
முருக பக்தர்கள் மாநாட்டில் அசம்பாவிதம் அரசு மீது நயினார் நாகேந்திரன் சந்தேகம்
ADDED : ஜூன் 04, 2025 01:26 AM

விருதுநகர்:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அசம்பாவிதம் உண்டாக்கும் எண்ணத்தில் தி.மு.க., அரசாங்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது, என விருதுநகரில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மதுரையில் ஜூன் 22ல் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் எதுவும் அசம்பாவிதம் நடந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருப்பது மாநாட்டில் அசம்பாவிதத்தை உண்டாக்கும் எண்ணத்தில் உள்ளார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
2024ல் ஒரத்தநாட்டில் ஒரு பெண், 10வயது சிறுமி, சென்னையில் மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு தெரியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகமான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிர்வாகத்தினர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மட்டும் இவ்வளவு ஆர்வம் காட்டியதில் சந்தேகம் உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க. எவ்வளவு பெட்டி கொடுத்தாலும் தோற்பது உறுதி. இவ்வாறு கூறினார்.