/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 12 ஆண்டுகளாக வாரம் 3 முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்; தினசரி சேவைக்கு தேவை எம்.பி.,க்கள் குரல் 12 ஆண்டுகளாக வாரம் 3 முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்; தினசரி சேவைக்கு தேவை எம்.பி.,க்கள் குரல்
12 ஆண்டுகளாக வாரம் 3 முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்; தினசரி சேவைக்கு தேவை எம்.பி.,க்கள் குரல்
12 ஆண்டுகளாக வாரம் 3 முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்; தினசரி சேவைக்கு தேவை எம்.பி.,க்கள் குரல்
12 ஆண்டுகளாக வாரம் 3 முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்; தினசரி சேவைக்கு தேவை எம்.பி.,க்கள் குரல்
ADDED : செப் 01, 2025 07:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : சென்னையில் இருந்து 12 ஆண்டுகளாக வாரம் 3 முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக இயங்குவதற்கு தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி எம்.பி.க்கள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெருமளவில் சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் போக்குவரத்து வசதிக்காக சென்னையில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினசரி சேவையாக இயக்கப் படுகிறது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டும் தனியாக ஒரு தினசரி ரயில் இல்லை. ராமேஸ்வரம், செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு வரும் ரயிலில் தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. 2013 ஜூன் சென்னையில் இருந்து காரைக்குடி வரை வாரம் இருமுறை இயங்கிய சிலம்பு எக்ஸ்பிரஸ் பின் சிவகங்கை வழியாக மானாமதுரை வரை தடம் நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது. பின் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரயில் 2017 மார்ச்சில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு தற்போது வரை வாரம் 3 முறை மட்டுமே இயங்கி வருகிறது.
திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு இயங்கும் ஒரே ரயிலாக இந்த ரயில் மட்டுமே உள்ளது. இதனால் இந்த வழித்தட நகரங்களுக்கு செல்லும் தென் மாவட்ட மக்கள் அதிகளவில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை நம்பி பயணிக்கின்றனர்.
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு கொல்லம், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் தான் தினசரி சேவையாக இயங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போதெல்லாம் முன்பதிவு முடிந்து வெயிட்டிங் லிஸ்ட் காணப்படுகிறது. தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் டிக்கெட் கிடைக்காத நிலையே உள்ளது.
எனவே கடந்த 12 ஆண்டுகளாக வாரம் 3 முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
இதற்குப் பின்பு இயக்கப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் கூட தற்போது தினசரி ரயிலாக இயங்கி வருகிறது. இதற்கு கேரள மாநில எம்.பி.க்களின் தொடர் முயற்சியே காரணமாகும்.
இது போல் தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த பிரச் சனையை கொண்டு சென்றாலும் தொடர் முயற்சிகள் எடுக்க வேண்டும்.