/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குழந்தை கடத்தல் தடுப்பு சென்சார்களில் கண்காணிப்பது அவசியம்: மாவட்ட அரசு தலைமை, தாலுகா மருத்துவமனைகளில்குழந்தை கடத்தல் தடுப்பு சென்சார்களில் கண்காணிப்பது அவசியம்: மாவட்ட அரசு தலைமை, தாலுகா மருத்துவமனைகளில்
குழந்தை கடத்தல் தடுப்பு சென்சார்களில் கண்காணிப்பது அவசியம்: மாவட்ட அரசு தலைமை, தாலுகா மருத்துவமனைகளில்
குழந்தை கடத்தல் தடுப்பு சென்சார்களில் கண்காணிப்பது அவசியம்: மாவட்ட அரசு தலைமை, தாலுகா மருத்துவமனைகளில்
குழந்தை கடத்தல் தடுப்பு சென்சார்களில் கண்காணிப்பது அவசியம்: மாவட்ட அரசு தலைமை, தாலுகா மருத்துவமனைகளில்
ADDED : மார் 27, 2025 05:58 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடத்தல் தடுப்பு சென்சார்களை நிறுவி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாலுகா மருத்துவமனைகள் உள்ளது.
தற்போது அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு 550 படுக்கைகளுடன் கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்தமாதம் திறக்க வாய்ப்புள்ளது. ராஜபாளையம் தாலுகா மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் கடந்தாண்டு மகப்பேறு பிரிவில் குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ரேடியோ அதிர்வெண் அடையாளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தாய்க்கு பச்சை நிற அடையாள அட்டை, அவரை உடன் இருந்து பார்த்துக்கொள்பவருக்கு சிவப்பு நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு, குழந்தையின் கையில் நீல நிறபட்டை பொருத்தப்படுகிறது.
இதனால் அடையாள அட்டை இல்லாதவர்கள் மகப்பேறு வார்டில் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றால் மருத்துவமனை வாசலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி சப்தத்தை கொடுத்து அடையாளம் காண்பித்து விடும்.
தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கான பரிசோதனை, சிகிச்கைக்கு அதிக செலவாவதால் அரசு மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் வெளி நபர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடக்கூடும் என்பதால் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்ககள் இருப்பது அவசியமாகியுள்ளது.
தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்டு திறக்கப்படவுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும், தாலுகா மருத்துவமனைகளிலும் இதே போன்று குழந்தை தடுப்பு சென்சார் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்துவது என்றால் எல்லா விதத்திலும் தரம் உயர்த்துவதாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் வரும் காலங்களில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் என்பதே இல்லாமல் போகும் நிலையை உருவாக்க முடியும். எனவே மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் தடுப்பு கருவிகளை நிறுவ நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.