Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாநில அரசுக்கு எதிரான எண்ணங்கள் மக்களிடம் இல்லை சொல்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

மாநில அரசுக்கு எதிரான எண்ணங்கள் மக்களிடம் இல்லை சொல்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

மாநில அரசுக்கு எதிரான எண்ணங்கள் மக்களிடம் இல்லை சொல்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

மாநில அரசுக்கு எதிரான எண்ணங்கள் மக்களிடம் இல்லை சொல்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

ADDED : ஜூலை 04, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
விருதுநகர்: மாநில அரசுக்கு எதிரான எண்ணங்கள் எதுவும் தற்போது இல்லை. ', என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

விருதுநகரில் நடந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க., பரப்புரை பொதுக்கூட்டம் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, தி.மு.க., நகரச் செயலாளர் தனபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். தமிழகத்தில் முதல்வராக பழனிசாமி இருந்த போது ஆட்சியை டில்லியில் அடமானம் வைத்தார். துாத்துக்குடியில் நடந்த துாப்பாக்கிச் சுட்டை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்து சென்ற கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்கள் வயிற்று வலியால் இறந்து விட்டதாக தெரிவித்தவர் பழனிசாமி.

மாநில அரசுக்கு எதிரான எண்ணங்கள் எதுவும் தற்போது இல்லை. லோக்சபா தொகுதிகளில் எண்ணிக்கையை குறைப்பது, ஹிந்தி, சமஸ்கிருதத்தை பரப்பும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அகழாய்விற்காக ரூ. 5 கோடி ஒதுக்கியது. இந்த நிதி தற்போது ரூ. 7 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கங்கை சமவெளியில் இருந்து வரலாறு உருவாகவில்லை, வைகை சமவெளியில் இருந்து வரலாறு உருவாகியிருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக தெரியவந்துள்ளது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us