/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆண்டாள் கோயிலில் அமைச்சர் நேரு தரிசனம் ஆண்டாள் கோயிலில் அமைச்சர் நேரு தரிசனம்
ஆண்டாள் கோயிலில் அமைச்சர் நேரு தரிசனம்
ஆண்டாள் கோயிலில் அமைச்சர் நேரு தரிசனம்
ஆண்டாள் கோயிலில் அமைச்சர் நேரு தரிசனம்
ADDED : மே 13, 2025 04:24 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளான நேற்று அமைச்சர் நேரு மற்றும் தி.மு.க.,வினர் பயபக்தியுடன் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர்.
கோயிலுக்கு வந்த அவர் லட்சுமி நாராயணன், ஆண்டாள் சன்னதிகளை தரிசித்தார். பட்டர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்து ஆண்டாள் குங்குமத்தை நெற்றியில் பூசினர். பின்னர் வடபத்ரசயனர் சன்னதியில் நேரு தரிசனம் செய்தபோது, பட்டர்கள் அவருக்கு மாலை அணிவித்தனர். உடன் வந்த எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும் மாலை அணிவிக்கும் படி நேரு கூறினார். அவர்களுக்கும் பட்டர்கள் மாலை அணிவித்து நெற்றியில் குங்குமம் இட்டனர். அனைவரும் அதை பயபக்தியுடன் ஏற்றுக் கொண்டனர்.