ADDED : செப் 12, 2025 04:08 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நடந்த மக்கள் முகாமை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
அதன்பின், அருப்புக்கோட்டை கணேஷ் நகர் பகுதியில் புதிய குடிநீர் திட்ட பணிகளையும், பாதாள சாக்கடை திட்ட பணிகளையும் பார்வை யிட்டார். குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த பகுதி களில் ரோடுகள் அமைப்பது குறித்து அதிகாரி களிடம் ஆலோசனை நடத்தினார்.
உடன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், நகராட்சி துணை தலைவர் பழனிச்சாமி, திமுக., நகரச் செயலாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.