/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
ADDED : ஜூன் 11, 2025 07:15 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட அரசு திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார்.
தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு செல்லும் பஸ் வழித்தடங்கள் முறையாக இயக்குவது குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் பஸ்களை இயக்குவது குறித்தும், மகளிர்கான பயண பேருந்துகள் இயக்குவது குறித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதே போல் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா எனவும் ரேஷன் கடைகளுக்கு தேவைப்படும் கட்டட வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.