/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரியாணி நிறுவன உரிமம் தருவதாக பலரிடம் கூறி ரூ.13 கோடி மோசடி பிரியாணி நிறுவன உரிமம் தருவதாக பலரிடம் கூறி ரூ.13 கோடி மோசடி
பிரியாணி நிறுவன உரிமம் தருவதாக பலரிடம் கூறி ரூ.13 கோடி மோசடி
பிரியாணி நிறுவன உரிமம் தருவதாக பலரிடம் கூறி ரூ.13 கோடி மோசடி
பிரியாணி நிறுவன உரிமம் தருவதாக பலரிடம் கூறி ரூ.13 கோடி மோசடி
ADDED : செப் 11, 2025 03:47 AM

விருதுநகர்:பிரியாணி நிறுவன கிளை நடத்த உரிமம் தருவதாக, 13 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே விஜயரங்கபுரத்தைச் சேர்ந்தவர் கங்காதரன், 45. இவரது மனைவி தேவதாஸ் மரியநாயகம். இருவரும், 'மரக்கார் பிரியாணி' என்ற பெயரில் பிரியாணி நிறுவனத்தை நடத்தினர்.
தங்கள் பிரியாணி நிறுவனத்தின் பெயரில், கிளை உரிமம் தருவதாகவும், கடைகளை நிறுவனமே நடத்தி நிர்வகித்து, வருமானத்தில், 10 சதவீதம், மாதந்தோறும், 50,000 ரூபாய் லாபம் ஈட்டலாம் என பலரிடம் தெரிவித்தனர்.
மேலும், 21 இடங்களில் மா திரி கடைகளை திறந்து நம்ப வைத்தனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில், 239 பேரிடம், தலா, 5.18 லட்சம் ரூபாய் வசூலித்து, 13 கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கங்காதரன், ஊழியர்கள் சண்முக சுந்தரம், சதீஷ்குமார், பிரவீன் ராஜ் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளரான மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 34, கைது செய்யப்பட்டார்.