/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பருவம் தவறிய மழையால் மா விவசாயிகள் பாதிப்பு பருவம் தவறிய மழையால் மா விவசாயிகள் பாதிப்பு
பருவம் தவறிய மழையால் மா விவசாயிகள் பாதிப்பு
பருவம் தவறிய மழையால் மா விவசாயிகள் பாதிப்பு
பருவம் தவறிய மழையால் மா விவசாயிகள் பாதிப்பு
ADDED : மார் 23, 2025 07:17 AM
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் பருவம் தவறிய தொடர் மழையால் மா மரங்களில் விளைச்சல் பாதிப்பிற்கு உள்ளாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மா மர தோப்புகள் அதிகம். பராமரிப்பு குறைவு வருடம் ஒரு முறை சாகுபடி, அதிக நீர் தேவையில்லை போன்ற பல காரணங்களுக்காக நுாற்றுக்கணக்கான விவசாயிகள் மா மர சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாகவே வறட்சியான கோடையே மாமரங்களுக்கு ஏற்ற சீசன். கடந்த ஒரு வாரமாக ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. கடைசி கட்ட பூ பருவம் வந்துள்ள நிலையில் இத்தொடர் மழை பூக்கள் உதிர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஏற்கனவே இந்த ஆண்டும் நீர்நிலை செழிப்பால் மா விளைச்சல் சிக்கலை சந்திக்கும் என எதிர்பார்த்த நிலையில் பருவம் தவறி பெய்யும் மழை விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விவசாயி பாலராஜா: மூன்று வருடங்களாக நீர்நிலைகள் செழிப்பு பருவ நிலை மாறுபாடு காரணமாக குத்தகை எடுத்தவர்கள் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி இருந்தது. தற்போது கடைசி கட்ட பூக்கள் காய் பிடிக்கும் பருவத்தை எட்டி உள்ளது. ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் இந்த ஆண்டும் விளைச்சல் ஏமாற்றத்தையே தரும். மா மரங்களுக்கு தொடரும் இப்பிரச்சனையால் மாந்தோப்புகளை குத்தகை எடுக்கவே யோசனை செய்ய வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.