Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஹார்மோன் அனலைசர் மிஷின் துவக்கம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கியது

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஹார்மோன் அனலைசர் மிஷின் துவக்கம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கியது

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஹார்மோன் அனலைசர் மிஷின் துவக்கம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கியது

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஹார்மோன் அனலைசர் மிஷின் துவக்கம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கியது

ADDED : ஜூலை 02, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
விருதுநகர் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்ரமணியன் உத்தரவில் அரசு பேராட்சியர், பொறுப்பு சொத்தாட்சியரால் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 27 லட்சத்தில் ஹார்மோன் அனலைசர் மிஷின் வழங்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துமவமனையில் கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பரிசோதனை உட்பட பல ஹார்மோன் பரிசோதனைகள் என ஒரு மாதத்திற்கு 1500 பரிசோதனைகள் எடுக்கப்பட்டது.

மேலும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து இரு நாட்களுக்கு ஒரு முறை 2500 பரிசோதனைகள் எடுக்கப்பட்டு முடிவுகள் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் 80 பரிசோதனை முடிவுகள் பெறுவதற்கு 4 மணி நேரம் ஆனது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்ரமணியன் உத்தரவின் பேரில் அரசு பேராட்சியர், பொறுப்பு சொத்தாட்சியர் மூலமாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 27 லட்சத்து 37 ஆயிரத்து 600 மதிப்பில் ஹார்மோன் அனலைசர் மிஷின் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாரடைப்பு, இருதய நோய்கள், தைராய்டு நோய்கள், கர்ப்பகால தைராய்டு பரிசோதனை, குழந்தையின்மைக்கான ஹார்மோன் பகுப்பாய்வு, திருநங்கைகளுக்கான ஹார்மோன் பகுப்பாய்வு, ஹார்மோன் சமநிலையின்மையுடன் தொடர்புடைய பிறவிக் கோளாறுகள், புற்றுநோய் காரணிகள் உள்ளிட்டவற்றை எளிதாக பகுப்பாய்வு செய்ய முடியும்.

இந்த புதிய ஹார்மோன் அனலைசர் மிஷின் மூலமாக ஒரு மணி நேரத்தில் 80 பரிசோதனைகளை மிகவும் துல்லியமாக செய்து முடிவுகளை பெற முடியும். இதன் துவக்க விழா டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது.

இதில் கல்லுாரி துணை முதல்வர், உயிர்வேதியியல் துறைத் தலைவர் ரேகா, மருத்துவ கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை மருத்துவ கண்காணிப்பாளர் அன்புவேல், நிலைய மருத்துவ அலுவலர் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us