Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியில் பரவுது மெட்ராஸ் ஐ

காரியாபட்டியில் பரவுது மெட்ராஸ் ஐ

காரியாபட்டியில் பரவுது மெட்ராஸ் ஐ

காரியாபட்டியில் பரவுது மெட்ராஸ் ஐ

ADDED : செப் 24, 2025 06:17 AM


Google News
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் மெட்ராஸ் ஐ, சிறுவர்களுக்கு காய்ச்சல் பரவுவதால் அச்சத்தில் உள்ளனர்.

காரியாபட்டி பகுதியில் வெயில் கடுமையாக இருந்தது.

கோடை காலம் போல் வெயில் சுட்டரித்ததால் மக்கள் வெளியில் நடமாட சிரமப்பட்டனர். இந்நிலையில் சில தினங்களாக குளிர்ந்த காற்று வீசியதுடன், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பூமியில் உள்ள வெப்பம் வெளியேறுவதால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

சூட்டுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், நோய் எதிர்ப்பு சக்தி குறையாக உள்ள பலருக்கு, மெட்ராஸ் ஐ எனும் கண் வலி நோய் ஏற்பட்டு, பரவுகிறது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது.

அதேபோல் எஸ். தோப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் பள்ளிக்கு சென்று வருவதால் அங்குள்ள மற்ற மாணவர்களுக்கு பரவுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெங்கடேஸ்வரன், மருத்துவ அலுவலர், காரியாபட்டி அரசு மருத்துவமனை : சீதோஷன நிலை மாற்றம் காரணமாக வைரல் இன்பெக்சன் ஏற்பட்டு வருகிறது.

மெட்ராஸ் ஐ வருவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கண் கண்ணாடி அணிய வேண்டும். காய்ச்சல் பரவதை தடுக்க மற்றவர்களுடன் ஒதுங்கி இருக்க வேண்டும். டாக்டர்களை ஆலோசித்து வரும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us