Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பச்சை, மங்கு நீக்குதலுக்கு லேசர் சிகிச்சை

 பச்சை, மங்கு நீக்குதலுக்கு லேசர் சிகிச்சை

 பச்சை, மங்கு நீக்குதலுக்கு லேசர் சிகிச்சை

 பச்சை, மங்கு நீக்குதலுக்கு லேசர் சிகிச்சை

ADDED : டிச 01, 2025 06:33 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் பச்சை குத்துதல், முகத்தில் மங்கு ஆகியவற்றை லேசர் சிகிச்சையின் மூலமாக நீக்குவதற்கு நவீன மெஷின்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வெளிநோயாளிகள் பலர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் வித்தியாசமான கார்ட்டூன்கள், காதலன், காதலியன் பெயர்கள், அதன் முதல் எழுத்துக்கள் என பலவற்றை பச்சை குத்துகின்றனர். ஆனால் நாளடைவில் இவற்றை அகற்றுவதற்கு சிரமப்படுகின்றனர்.

மேலும் ஏற்கனவே பச்சை குத்திய இடத்தில் வேறு ஏதாவது டிசைனில் பச்சை குத்தி அதை மறைக்க முயற்சி செய்கின்றனர். அதுவும் சரியாக அமையவில்லை என்றால் தோல் தோற்றம் இழந்துவிடும் நிலை உருவாகிறது. இதை முறையாக அகற்றுவதற்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் பலரும் பரிதவித்து வருகின்றனர்.

இது குறித்து தோல் சிகிச்சை நிபுணர் சுலோச்சனா கூறியதாவது: விருதுநகர் அரசு மருத்துவமனையில் பச்சை குத்தியதை லேசர் சிகிச்சை மூலமாக அகற்றப்படுகிறது. மேலும் முகத்தில் வரும் மங்கு என்பது ஆண்களுக்கு சூரிய ஒளியாலும், பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தாலும் ஏற்படுகிறது. இங்கு மங்கு நீக்குதலுக்கான லேசர் சிகிச்சை தற்போது மாதத்திற்கு 20 பேருக்கும் மேல் அளிக்கப் படுகிறது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us