/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
ADDED : மார் 17, 2025 05:39 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் 4 வனச்சரகங்களிலும் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் வனத்துறை சார்பில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் துவங்கியது. 2 நாட்கள் நடந்த இப்பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள பங்கேற்றனர்.
இதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்தில் பாதுகாக்கப்பட்ட வனம் மற்றும் மலையடிவாரத்தில் நேற்று முன்தினம் காலை 7:00 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் வனத்துறையினர் பாதுகாப்புடன் தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இதில் ஒவ்வொரு பகுதியிலும் 10 முதல் 30க்கும் மேற்பட்ட நிலப்பறவைகளை தன்னார்வலர்கள் கண்டறிந்தனர். கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவுகளை அந்தந்த வனச்சரகத்தின் மூலம் ஒருங்கிணைத்து மாநில வனத்துறையின் நிபுணர்கள் குழுவினர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் தான் நிலப்பறவைகள் வகைகள், எண்ணிக்கைகள் தெரிய வருமென வனத்துறையினர் தெரிவித்தனர்.