/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ லட்சுமியாபுரம்- - சுக்கிரவார்பட்டி ரோட்டை அகலபடுத்த எதிர்பார்ப்பு லட்சுமியாபுரம்- - சுக்கிரவார்பட்டி ரோட்டை அகலபடுத்த எதிர்பார்ப்பு
லட்சுமியாபுரம்- - சுக்கிரவார்பட்டி ரோட்டை அகலபடுத்த எதிர்பார்ப்பு
லட்சுமியாபுரம்- - சுக்கிரவார்பட்டி ரோட்டை அகலபடுத்த எதிர்பார்ப்பு
லட்சுமியாபுரம்- - சுக்கிரவார்பட்டி ரோட்டை அகலபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2025 12:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: -ஸ்ரீவில்லிபுத்துார் அருகே லட்சுமியாபுரத்தில் இருந்து சுக்கிரவார்பட்டி வரையுள்ள ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பு, சிவகாசி ஊராட்சி ஒன்றிய எல்லைகளை ஒட்டி லட்சுமியாபுரம், மங்கலம், கோபாலன்பட்டி, புதுப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரங்களுக்கு வந்து செல்வது வழக்கம்.
இதற்காக சிவகாசியில் இருந்து கிருஷ்ணன் கோயில் வரையிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுக்கிரவார்பட்டி வரையிலும் அரசு டவுன் பஸ்கள் இயங்கி வருகிறது. மேலும், சிவகாசி பகுதிகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு கனரக வாகனங்களும் லட்சுமியாபுரம், மங்கலம், கோபாலன்பட்டி, புதுப்பட்டி வழியாக பயணித்து வருகிறது.
இந்நிலையில் லட்சுமியாபுரத்திலிருந்து சுக்ரவார்பட்டி வரையுள்ள ரோடு போதிய அகலம் இல்லாமல் இருப்பதால் எதிரும் புதிருமாக வரும் வாகனங்கள் எளிதில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வழித்தட ரோட்டினை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.