/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணி துவக்கம் கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணி துவக்கம்
கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணி துவக்கம்
கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணி துவக்கம்
கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூன் 18, 2025 11:20 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த அத்திகுளம் ரோட்டிலுள்ள கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் ரூ.2.28 கோடி மதிப்பில் புனரமைப்பு மணி நேற்று முதல் துவங்கியது.
ஹிந்து சமயஅறநிலையதுறை சார்பில் தமிழகத்தின்பல்வேறு கோயில்களின் திருப்பணிகள் துவக்க விழா சென்னை தலைமைசெயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
அந்நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளம் புனரமைக்கும் பணியையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
விழாவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கண்காணிப்பாளர் ஆவடையம்மாள், அறநிலையத்துறையினர் பங்கேற்றனர்.
கோயில் பட்டர்களின் சிறப்பு பூஜைக்கு பிறகு திருப்பணிகளை மலர் தூவி துவக்கி வைத்தனர்.