/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேசிய கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரியம் அணி சாம்பியன் தேசிய கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரியம் அணி சாம்பியன்
தேசிய கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரியம் அணி சாம்பியன்
தேசிய கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரியம் அணி சாம்பியன்
தேசிய கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரியம் அணி சாம்பியன்
ADDED : மே 17, 2025 12:45 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்த தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் பெண்கள் பிரிவில் கேரள மின்வாரிய அணி, ஆண்கள் பிரிவில் பேங்க் ஆப் பரோடா அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
ராஜபாளையம் நகர கூடைப்பந்து கழகம் சார்பில் தேசிய அளவிலான போட்டிகள் பி.ஏ.சி.எம் மைதானத்தில் நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை பெண்கள் பிரிவில் மும்பை மேற்கு ரயில்வே, சென்னை வருமான வரித்துறை, கேரள மின்வாரியம் உள்பட 12 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றன.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய ராணுவம், பேங்க் ஆப் பரோடா அணிகள் மோதின. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பேங்க் ஆப் பரோடா 2 புள்ளிகள் கூடுதலாக பெற்று 78-76 என்ற புள்ளி கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மூன்றாம் இடம் கடற்படை அணி பெற்றது.
பெண்கள் பிரிவில் கேரள மின்வாரிய அணி முதலிடம், சென்னை வருமான வரித்துறை, ரைசிங் ஸ்டார் சென்னை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., கண்ணன், பீமா ஜுவல்லர்ஸ் சுதிர் கபூர் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை கூடைப்பந்து கழக தலைவர் ராம்குமார், செயலர் பீமானந்த், பொருளாளர் ராம் சிங் செய்தனர்.