/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கமலின் தோல்வி மற்றவருக்கும் இருக்கும் என கூற முடியாது மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து கமலின் தோல்வி மற்றவருக்கும் இருக்கும் என கூற முடியாது மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து
கமலின் தோல்வி மற்றவருக்கும் இருக்கும் என கூற முடியாது மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து
கமலின் தோல்வி மற்றவருக்கும் இருக்கும் என கூற முடியாது மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து
கமலின் தோல்வி மற்றவருக்கும் இருக்கும் என கூற முடியாது மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து
ADDED : செப் 18, 2025 02:52 AM
விருதுநகர்:''மக்கள் நீதி மய்யம் தலைவர் எம்.பி., கமல், கட்சி துவங்கிய நேரம் என்பது வேறு. அவரின் தோல்வி மற்றவர்களுக்கும் தோல்வியாக இருக்கும் என கூற முடியாது,'' என, விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் டில்லி பயணத்தின் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., இருப்பது தெளிவாக தெரிகிறது. பிரதமர் மோடியால் தமிழக சட்டசபையில் செங்கோல் அமைக்கப்படும் என தெரிவித்த முன்னாள் கவர்னர் தமிழிசை பா.ஜ., ஆட்சி தமிழகத்தில் கொண்டு வரப்படும் என்ற உண்மையை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவமதிக்கும் செயலில் ஈடுபடும் பா.ஜ.,வின் செயலை அ.தி.மு.க.,வினர் ஏற்க மாட்டார்கள். மாநிலத்தில் கடந்த மூன்று தேர்தல்களில் பா.ஜ.,விற்கு தமிழக மக்கள் இடமளிக்கவில்லை. பொது எதிரியாக பா.ஜ., மாறியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் துவக்கத்தில் இருந்து பா.ஜ., தி.மு.க., இரு கட்சிகளுக்கும் எதிரான கொள்கையில் உள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் ம.நீ.ம., கட்சியை துவங்கிய கமலின் நேரம் என்பது வேறு. அவரின் தோல்வி மற்றவர்களுக்கும் தோல்வியாக இருக்கும் என கூற முடியாது. ஒவ்வொரு தேர்தலும் தற்போது வரை மாறுபட்டு நடந்து வருகிறது என்றார்.