ADDED : மார் 24, 2025 06:16 AM

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ சார்பில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்துதல், சத்துணவு ஊழியர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பையா, முத்தையா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, நீதிராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகணேசன், பிச்சை உள்பட பலர் பங்கேற்றனர்.