ADDED : செப் 07, 2025 02:39 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், ஜெசி சவுந்தர் அறக்கட்டளை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இம் முகாமில் தகுதியான நபர்களுக்கு அடையாள அட்டையை, முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள், அறக்கட்டளை நிர்வாகி ஜெசிந்தா பங்கேற்றனர்.