ADDED : ஜூன் 10, 2025 12:55 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்காக தொழில்முனைவோர், புத்தாக்க சான்றிதழ் படிப்பு ஜூன் 25ல் துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்களை https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கட்டணமாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
இதில் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள், ஐ.டி.ஐ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி கட்டணம் வங்கி கடன் மூலமாக செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 86681 01638, 86681 07552 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளர் சத்யா தெரிவித்துள்ளார்.