ADDED : செப் 12, 2025 04:14 AM
விருதுநகர்: விதை விற்பனை நிலையங்களில் விதைகளில் பருவம், மண்வளத்திற்கு ஏற்ற ரகங்களை கேட்டு பெற வேண்டும். வேறு ஏதேனும் ரகங்களை சிபாரிசு செய்தால் விழிப்புணர்வுடன் அதை தவிர்த்து, தாங்கள் விரும்பும் ரகங்களையே வாங்க வேண்டும்.
அரசால் சான்று அளிக்கப்பட்ட ஆதார விதை, விதைகளை பயன்படுத்து வது நல்லது. உண்மை நிலை விதைகளை வாங்கும் போது அதன் பைகளில் விதை நடவிற்கு ஏற்ற பருவம், பகுதி குறிப்பிட்டு இருக்கும் அதை கவனித்து வாங்க வேண்டும்.
மேலும் விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைக்கான விற்பனை பட்டியல் கட்டாயம் கேட்டு பெற வேண்டும். பயிர் சாகுபடி முடிவடையும் வரை அதை பத்திரமாக வைக்க வேண்டும். விதைகளில் குறைபாடுகள் இருப்பின் தங்கள் பகுதி விதை ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என சிவகாசி வட்டாரத்தில் ஆய்வு செய்த போது விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி கூறினார்.