/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு --தரையில் சாயும் நெற்கதிர்கள் மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு --தரையில் சாயும் நெற்கதிர்கள்
மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு --தரையில் சாயும் நெற்கதிர்கள்
மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு --தரையில் சாயும் நெற்கதிர்கள்
மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு --தரையில் சாயும் நெற்கதிர்கள்
ADDED : மே 31, 2025 12:33 AM

சேத்துார்: தேவதானம் பகுதியில் தொடரும் சாரல் மழையால்முற்றிய நெற்கதிர்கள் தரையில் சாய்ந்துள்ளது. அறுவடை பாதிப்பால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை தேவதானம் சாஸ்தா கோயில் நீர் தேக்கம் மூலம் நகர குளம், பெரியகுளம், வாண்டையார் குளம், சேர்வராயன் குளம் உள்ளிட்ட கண்மாய் பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
தற்போது இப்பகுதியில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு பெரியகுளம், நகர குளம் பகுதிகளில் கோடை பருவ நெல் அறுவடை வேகம் எடுத்துஉள்ள நிலையில் தொடர் சாரல் மழையால் அறுவடை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறுவடைக்காக பாசன நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் ஈரமாகி விட்டது. அத்துடன் இப்பகுதியில் திடீரென சுழற்றி அடித்து வரும் காற்றினால் நெற்கதிர்கள் மண்ணில் சாய்ந்து வருகின்றன.
தொடர் மழை அறிவிப்பு காரணமாக நெல்மணிகள் ஈரம் அதிகமாகி பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.