ADDED : செப் 20, 2025 03:37 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பலபுளி பஜார் அருகே கருப்பஞானியார் கோயிலில் குருபூஜை நடந்தது.
கோயில் வளாகத்தில்விநாயகர், முருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சாய்பாபா, சனீஸ்வரன், துர்கை, நவக்கிரகங்கள், காலபைரவர் லிங்கோத்பவர், பிரம்மா உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
காலை 10:00 மணிக்கு முப்பழ பூஜையும், 11:30 மணிக்கு மலர்களால் பூஜையும் அன்னதானமும் நடந்தது.
ஏற்பாடுகளை தலைவர் வைத்தீஸ்வரன் தர்மகர்த்தா பழனிச்சாமி, துணை தலைவர் சுந்தரமணி, பூஜாரி சோமு செய்திருந்தனர்.