ADDED : மே 11, 2025 11:30 PM

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியில் உள்ள கோயில்களில் குரு பெயர்ச்சி முன்னிட்டு குருபகவானுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கி பன்னிரெண்டு ராசிகளுக்கான ஹோமம் நவகிரக ஹோமம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் குரு பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மங்கள ஆரத்தி, தீபாராதனைகள் நடந்தது.
* திருச்சுழி பூமிநாதன் கோயிலில் குரு பகவானுக்கு தேன், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.