/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆணிகளால் ஆயுள் குறையும் மரங்கள் தேவையாகுது பசுமைக்குழு நடவடிக்கை ஆணிகளால் ஆயுள் குறையும் மரங்கள் தேவையாகுது பசுமைக்குழு நடவடிக்கை
ஆணிகளால் ஆயுள் குறையும் மரங்கள் தேவையாகுது பசுமைக்குழு நடவடிக்கை
ஆணிகளால் ஆயுள் குறையும் மரங்கள் தேவையாகுது பசுமைக்குழு நடவடிக்கை
ஆணிகளால் ஆயுள் குறையும் மரங்கள் தேவையாகுது பசுமைக்குழு நடவடிக்கை
ADDED : ஜூன் 16, 2025 12:10 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மரங்களில் ஆணி அடித்து அதன் ஆயுள் காலத்தை குறைக்கும் தனியார் நிறுவனங்களை மாவட்ட நிர்வாகத்தின் பசுமை குழு தடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் கருவேல மரங்களே அதிகளவில் உள்ளன என்ற கருத்தை பின்னுக்கு தள்ளி, பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் புங்கன், வேம்பு, புளிய மரங்களை அதிகளவில் நடப்பட்டு வருகின்றன. நான்கு வழிச்சாலை, மாநில நெடுஞ்சாலை, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் குடியிருப்பு, அரசு அலுவலகங்களில் வளரும் மரங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் நகர்ப்பகுதிகளில் முக்கிய வீதிகளில் நடப்பட்ட மரங்களை மட்டும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பர துாதுவர்களாக மாற்றி விட்டனர். இதனால் மதுரை ரோடு, ராமமூர்த்தி ரோடு, சிவகாசி ரோடு, கலெக்டர் அலுவலகம், ஆத்துப்பாலம், கருமாதி மடம் முக்கு என பல்வேறு இடங்களில் மரங்களில் ஆணி அடிக்கப்பட்டு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
நல்ல திரட்சியான மரத்தில் ஆணி அடிப்பதன் மூலம் அதன் வேர்ச்சத்து பாதிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. 30 ஆண்டு காலம் உள்ள மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு 15 ஆண்டுகளிலே பட்டு போய்விடுகிறது. மரம் வெட்டுவதை தடுப்பது மட்டுமில்லை பசுமைக்குழுவின் வேலை. மரத்தின் வளர்ச்சியையும், அதன் ஆயுளையும் குறைக்கும் வகையில் செயல்படும் ஆணி அடித்தலையும் தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு மரங்கள் மீது ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கும் தனியார் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான அபராதத்தை விதிக்க வேண்டும். நடவடிக்கைகள் கடுமையானால் மட்டுமே வெறும் மரம்தானே என்று நினைத்து எதிர்கால சந்ததியின் சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைப்போரை கட்டுப்படுத்த முடியும்.