/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பசுமை, குளுமை தரும் மரங்கள் முன்னோர் அளித்த கொடை பசுமை, குளுமை தரும் மரங்கள் முன்னோர் அளித்த கொடை
பசுமை, குளுமை தரும் மரங்கள் முன்னோர் அளித்த கொடை
பசுமை, குளுமை தரும் மரங்கள் முன்னோர் அளித்த கொடை
பசுமை, குளுமை தரும் மரங்கள் முன்னோர் அளித்த கொடை
ADDED : ஜூன் 02, 2025 12:27 AM

இயற்கையை பாதுகாப்பதின் அவசியத்தை உணர்ந்து பல தலைமுறைகளுக்கு முன்பு நமது முன்னோர் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். அப்போது நடப்பட்ட மரக்கன்றுகள் தான் தற்போது கொளுத்தும் கோடை வெயிலுக்கு, தற்போது பசுமையை குளுமையும் தரும் பொக்கிஷமாக திகழ்வதை நாம் இன்று ஒவ்வொருவரும் கண்கூடாக பார்க்கிறோம்.
குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்துாரில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் மாரியம்மன் கோவில் தெரு, மாயாண்டிப்பட்டி, மடத்துப்பட்டி தெருக்கள் உட்பட பல்வேறு தெருக்களிலும் உள்ள மரங்களின் நிழல்களில் நெசவாளர்கள் தங்கள் நெசவு தொழில்களை செய்வதை இன்றும் காண முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரின் கழிவு நீர் மையமாக சுகாதாரக் கேடுடன் காணப்பட்ட திருப்பாற்கடலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் அம்ரூத் திட்டத்தின் கீழ் சீரமைத்து, மக்கள் காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்ல பேவர் பிளாக் தளம் அமைத்துள்ளனர். திருப்பாற்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள மரங்கள் நடைபயிற்சி செல்வோருக்கு இளைப்பாற உதவுகிறது.
இதேபோல் 33 வார்டுகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு தெருக்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து பராமரித்து வருவதே நாம் அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லும் சொத்தாகும். அவ்வாறு செய்தால் நகரின் ஒவ்வொரு தெருக்களும் மரங்கள் நிறைந்த பசுமை நிறைந்த தெருக்களாக மாறும். மாசில்லா நகரமாகவும் ஸ்ரீவில்லிபுத்துார் உருவெடுக்கும். இதற்கு அந்தந்த பகுதி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என்பது மூத்தோர்களின் எதிர்பார்ப்பாகும்.