ADDED : மே 31, 2025 11:25 PM
சிவகாசி:சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் முத்துராஜ் வரவேற்றார். தாளாளர் அசோகன் தலைமை வகித்தார். சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
மாணவ ஆசிரியர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரிய மாணவிகள் சிவரஞ்சனி, மணிபிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.