Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துாரில் அரசு டவுன் பஸ் ஜப்தி

சாத்துாரில் அரசு டவுன் பஸ் ஜப்தி

சாத்துாரில் அரசு டவுன் பஸ் ஜப்தி

சாத்துாரில் அரசு டவுன் பஸ் ஜப்தி

ADDED : ஜூன் 28, 2025 12:17 AM


Google News
சாத்துார்: சாத்துாரில் விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு டவுன் பஸ்சை நீதிமன்ற உத்தரவுப்படி கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

முத்தால் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து 2012ம் ஆண்டு சிவகாசி-சாத்துார் ரோட்டில் சைக்கிளில் சென்ற போது சிவகாசியில் இருந்து சாத்துார் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.

அவர் மனைவி சுப்புலட்சுமி மகன்கள் மாரிச்செல்வம், ரஞ்சித் குமார், ஆகியோர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கு சாத்துார் சார்பு நீதிமன்றம் நீதிபதி முத்து மகாராஜன் முன்னிலையில் விசாரணை நடந்தது.

2024 ஜூன் 18ல் சிவகாசி அரசு போக்குவரத்து கழகம் மனுதாரருக்கு இழப்பீடு தொகையாக ரூ.11 லட்சத்து ஆயிரத்தி 150 வழங்கவும் தவறும் பட்சத்தில் 7.5 சதவீத வட்டியுடன் இரண்டு மாதத்தில் நீதிமன்றத்தில் கட்டவேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்படி இழப்பீடு தொகை நீதிமன்றத்தில் கட்டப்படவில்லை. மனுதாரர் மேல் முறையீடு செய்ததை தொடர்ந்து 2025 ஜூன் 5ல் இழப்பீடு தொகையுடன் நீதிமன்ற செலவு உட்பட ரூ.14,61,143 வழங்க தவறிய சிவகாசி அரசு போக்குவரத்து கழக டவுன்பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சாத்துார் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த சிவகாசி அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். சிவகாசி போக்குவரத்து கழக மேலாளர் 15 நாளில் இழப்பீடு தொகை வழங்குவதாக வழங்கிய உத்திரவாதத்தை தொடர்ந்து பஸ் விடுவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us