/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வெயிலுக்கு நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடிவெயிலுக்கு நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி
வெயிலுக்கு நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி
வெயிலுக்கு நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி
வெயிலுக்கு நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி
ADDED : மார் 14, 2025 02:37 AM

திருச்சுழி:திருச்சுழியில் இருந்து அரசு டவுன் பஸ் குச்சம்பட்டி, புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும். பள்ளி மாணவ, மாணவியர் இதில் அதிகம் செல்வர்.
நேற்று மாலை 4:00 மணிக்கு திருச்சுழியிலிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு குச்சம்பட்டி புதூருக்கு சென்ற பஸ் திருச்சுழி தாண்டிய போது கடும் வெயில் அடித்ததால் வெப்பம் தாங்காமல் முன்பக்க கண்ணாடி நொறுங்கி தூள் தூளானது. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணித்தவருக்கு காயம் இல்லை. பின் அங்கிருந்து மக்கள் நடந்தே ஊருக்கு சென்றனர்.