/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நமக்கு நாமே : பருவ மழையால் தொற்று பரவ வாய்ப்பு: காய்ச்சலை தடுக்க தேவை விழிப்புணர்வு நமக்கு நாமே : பருவ மழையால் தொற்று பரவ வாய்ப்பு: காய்ச்சலை தடுக்க தேவை விழிப்புணர்வு
நமக்கு நாமே : பருவ மழையால் தொற்று பரவ வாய்ப்பு: காய்ச்சலை தடுக்க தேவை விழிப்புணர்வு
நமக்கு நாமே : பருவ மழையால் தொற்று பரவ வாய்ப்பு: காய்ச்சலை தடுக்க தேவை விழிப்புணர்வு
நமக்கு நாமே : பருவ மழையால் தொற்று பரவ வாய்ப்பு: காய்ச்சலை தடுக்க தேவை விழிப்புணர்வு
ADDED : மே 26, 2025 01:59 AM

மாவட்டத்தில், பரவலாக அவ்வப்போது பருவமழை பெய்து வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. சில நீர் நிலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து அசுத்தமாக கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி கடிக்கும் பட்சத்தில் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற நேரங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களை காவு வாங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சுற்றுப்புறத்தில் மழை நீர் தேங்குவதால் டெங்கு பரவுகிறது. குறிப்பாக, நன்னீரில் டெங்கு கொசு உற்பத்தியாகி பகலில் மனிதர்களை கடிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்பட்டு நோய் எளிதில் பரவும். அவ்வாறு நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் கடுமையான காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, உடல் வலி, கண்கள் சிவந்து காணப்படுவது நோயின் அறிகுறிகள். இந்நோய் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு 7 நாட்களில் சரியாகும். ஒரு சிலருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். உடனடியாக தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன் வர வேண்டும்.
நோய் ஏற்படாமல் தடுக்க கொசுக்களை ஒழிப்பது ஒன்றே தீர்வு. கொசு வளர வாய்ப்பு இல்லாமல் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பழைய பொருட்கள், டயர்கள், டப்பாக்களில் மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி செடி, கொடிகள், புதர் மண்டி கிடப்பது, இளநீர் மட்டை, தேங்காய் மூடி உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
குளிர்சாதன பெட்டியில் தேங்கி இருக்கும் தண்ணீரை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட வேண்டும். நோய் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்காமல் நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசும் மக்களிடத்தில் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி காய்ச்சல் பரவுவதை தடுப்பது அவசியமாகிறது.