ADDED : செப் 19, 2025 01:55 AM

தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே முறம்பில் தேங்காய் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின.
சங்கரன்கோவில் ரோடு முறம்பு சீயோன் மவுண்ட் பகுதியில் ராஜபாளையத்தை சேர்ந்த புஷ்பா தேங்காய் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தேங்காய் நாரில் தீப்பிடித்து எரிந்தது.
ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வ ரத்தினம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கயிறுகள், தயாரிப்பு மிஷின்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.