/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறை முயற்சி; விவசாயிகள் எதிர்ப்பு மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறை முயற்சி; விவசாயிகள் எதிர்ப்பு
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறை முயற்சி; விவசாயிகள் எதிர்ப்பு
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறை முயற்சி; விவசாயிகள் எதிர்ப்பு
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறை முயற்சி; விவசாயிகள் எதிர்ப்பு
விவசாயிகள் எதிர்ப்பு
இது பற்றி அறிந்த விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கலெக்டர் நடத்திய குறை தீர்க்கும் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்று அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை. சிப்காட்டுக்கு நிலம் எடுக்க வில்லை என வாய்மொழியாக கலெக்டர் ஜெயசீலன் பதில் அளித்தார். ஆனால் மீண்டும் அப் பகுதியில் 129 ஏக்கர் நிலங்களை ஒப்படைக்க சர்வே எண் உள்ளிட்ட குறியீடுகளை காண்பித்து உரிய வழிமுறை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
இதுகுறித்து காவிரி, குண்டாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் கூறியதாவது: தென் மாவட்டங்களின் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில் அக்கறை கொள்ளாமல் அரசு தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தி வருவதை விவசாய சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாது. விவசாய கூட்டங்களில் கலெக்டர் எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ளார். அரசு தலையிட்டு வேளாண் ஆராய்ச்சி நிலைய நிலத்தை முழுமையாக விவசாய வளர்ச்சிக்கு தான் பயன்படுத்த வேண்டும். இந்த நில எடுப்பை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலை 15-ல் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.