Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சட்டசபை மதிப்பீட்டு குழுவுடன் விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பு 

சட்டசபை மதிப்பீட்டு குழுவுடன் விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பு 

சட்டசபை மதிப்பீட்டு குழுவுடன் விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பு 

சட்டசபை மதிப்பீட்டு குழுவுடன் விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பு 

ADDED : செப் 23, 2025 03:51 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திற்கு விரைவில் வரவுள்ளதமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு விவசாயிகளுடன் சிவகங்கை மாவட்டத்தை போல் விருதுநகர் மாவட்டத்திலும் சந்திப்புக் கூட்டம் நடத்தி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி தாலுகாவில் விளைவிக்கப்படும்கரும்புகள்தஞ்சாவூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல நிர்பந்திக்கப்படுகிறது. அலங்காநல்லுார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு போகும் வகையில் அந்த ஆலையை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2018-19ம் ஆண்டு தரணி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா நிலுவை தொகை ரூ.3 கோடிவழங்காமல் உள்ளது. அதை பெற்றுத் தர வேண்டும். மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தரமாக செயல்ட களம், இதர நடவடிக்கைகள், தார்பாய் நெல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா கூறியதாவது:மா விவசாயம் 10 ஆயிரம் எக்டேர் உற்பத்தி செய்யப்படுகிறது. பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.ராஜபாளையம் சேத்துார் பிர்கா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சின்னையன் கோட்டை அணை பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. தற்போதுதண்ணீர் தேங்கவில்லை. பராமரிப்பு போதவில்லை. அதை சீரமைத்தால் நிலத்தடி நீர் பெருகும். அணையை சீரமைக்க வேண்டும்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் யானைகள் வரத்து கண்காணிக்க மின் கோபுரங்கள், டிரோன்கள் தொங்கும் சோலார் மின் வேலிகள் அமைக்க வேண்டும்.

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த இயற்கை முறையில் ஒட்டுண்ணி தயாரிப்பு நிலையம் வேண்டும்.புதிய கலெக்டர் அலுவலகத்தில் குமாரசாமி ராஜாவுக்கு மார்பளவு சிலை வைக்க வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us