/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஜூன் 17ல் ஏற்றுமதி சட்ட திட்ட பயிற்சி ஜூன் 17ல் ஏற்றுமதி சட்ட திட்ட பயிற்சி
ஜூன் 17ல் ஏற்றுமதி சட்ட திட்ட பயிற்சி
ஜூன் 17ல் ஏற்றுமதி சட்ட திட்ட பயிற்சி
ஜூன் 17ல் ஏற்றுமதி சட்ட திட்ட பயிற்சி
ADDED : ஜூன் 02, 2025 12:24 AM
விருதுநகர்: தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளர் சத்யா செய்திக்குறிப்பு: அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறை, சட்டதிட்டங்கள் குறித்த 4 நாட்கள் பயிற்சி ஜூன் 17 முதல் 20 வரை மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
இதில் ஏற்றுமதியில் சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள், வர்த்தகக் கோள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி சம்மந்தப்பட்ட சட்டதிட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். நேரடியாக துாத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று பார்வையிடுதல், 'வேர்ஹவுஸ் பேக்கிங்', 'ஷிப்பிங்' நடைமுறைகளை நேரடியாக பயிற்சி அளிக்கப்படும்.
ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புவோர் பங்கேற்கலாம். விவரங்களை www.editn.in தளம், 95668 49767, 90806 09808 அலைபேசி எண்களில் அறியலாம். இந்த தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம், என்றார்.