/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு ஆலையில் வெடி விபத்து விடுமுறையால் உயிர் சேதம் தவிர்ப்பு பட்டாசு ஆலையில் வெடி விபத்து விடுமுறையால் உயிர் சேதம் தவிர்ப்பு
பட்டாசு ஆலையில் வெடி விபத்து விடுமுறையால் உயிர் சேதம் தவிர்ப்பு
பட்டாசு ஆலையில் வெடி விபத்து விடுமுறையால் உயிர் சேதம் தவிர்ப்பு
பட்டாசு ஆலையில் வெடி விபத்து விடுமுறையால் உயிர் சேதம் தவிர்ப்பு
ADDED : மே 26, 2025 02:35 AM

சிவகாசி,: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அம்மாபட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், அறை தரைமட்டமானது.
அம்மாபட்டியில், தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான 'கணேஷ்வரி' பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான மணி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில், நேற்று காலை 7:00 மணிக்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை தரைமட்டமானது.
விபத்தால் நீண்ட துாரத்திற்கு சத்தம் கேட்டதோடு, அதிர்வும் ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மணி மருந்து, அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், வேதியியல் மாற்றம் காரணமாக நீர்த்து, தானாகவே வெடித்துள்ளது என, முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
நேற்று விடுமுறை என்பதால், தொழிலாளர்கள் வரவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.