/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குடிநீரில் உவர்ப்பு தன்மையை கண்காணிக்க எதிர்பார்ப்பு! சிறுநீரக பிரச்னைகளுக்கு வாய்ப்பால் அச்சம்குடிநீரில் உவர்ப்பு தன்மையை கண்காணிக்க எதிர்பார்ப்பு! சிறுநீரக பிரச்னைகளுக்கு வாய்ப்பால் அச்சம்
குடிநீரில் உவர்ப்பு தன்மையை கண்காணிக்க எதிர்பார்ப்பு! சிறுநீரக பிரச்னைகளுக்கு வாய்ப்பால் அச்சம்
குடிநீரில் உவர்ப்பு தன்மையை கண்காணிக்க எதிர்பார்ப்பு! சிறுநீரக பிரச்னைகளுக்கு வாய்ப்பால் அச்சம்
குடிநீரில் உவர்ப்பு தன்மையை கண்காணிக்க எதிர்பார்ப்பு! சிறுநீரக பிரச்னைகளுக்கு வாய்ப்பால் அச்சம்
ADDED : ஜூன் 04, 2024 05:59 AM
மாவட்டத்தில் மாநகராட்சி ஒன்று, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை இருந்தாலும், சுவையில் சிக்கல் இல்லை. ஆனால் சாத்துார், விருதுநகர், காரியாபட்டி, நரிக்குடி, அருப்புக்கோட்டை பகுதிகளில் குடிநீர் லேசான உவர்ப்பு தன்மையோடு உள்ளன. இதனால் நல்ல தரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
டி.டி.எஸ்., ஒரு லிட்டருக்கு 300 மி.கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் டி.டி.எஸ்., இயந்திரங்கள் மூலம் அளவீடு செய்தால் அதற்கு மேலே இருக்க வாய்ப்புள்ளது. காரணம் அந்த அளவுக்கு உவர்ப்பான குடிநீர் வினியோகமே செய்யப்படுகிறது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நரிக்குடி, காரியாபட்டி போன்ற பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு போல் உவர்ப்பு நீரால் சிறுநீரக பாதிப்புகளும் அதிகம் உள்ளன.
அதே போல் சாத்துார், விருதுநகரில் நந்திரெட்டியபட்டி, சின்னப்பேராலி பகுதிகளில் விருதுநகர் நகராட்சி பகுதிகளிலும் உவர்ப்பு தன்மையோடு குடிநீர் வினியோகிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில் நிறைய பேர் சிறுநீரக பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தவிர விலைக்கு வாங்கி குடிக்கும் குடிநீரிலும் லேசான உவர்ப்பு தன்மை உள்ளது. இதை குறைக்க இனிப்பு சுவை ஏற்படுத்த கலப்படம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் இது குறித்து கேட்டால் நகராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தான் மினிலாரி குடிநீர் வண்டிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் இது போன்ற ஆய்வுகளை செய்வதில்லை. மேலும் நகரில் எத்தனை குடிநீர் வண்டிகள் இயங்குகின்றன என்பது பற்றிய எந்த பட்டியலும் உள்ளாட்சி அமைப்பினரிடம் இல்லை. யார் யாரோ குடிநீர் கொண்டு வருகின்றனர். அதை மக்களிடம் வினியோகம் செய்கின்றனர்.
மக்களும் வேறு வழியின்றி நம்பி குடிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்பு மூலம் வழங்கப்படும் குடிநீரின் உப்பு தன்மையை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் குழு அமைக்க வேண்டும்.