ADDED : ஜூன் 12, 2025 01:52 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம்எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களுக்கு திறன், வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களுக்கு, ஜி.எஸ்.டி., வருமானவரி தொழில் நுட்பபயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐ.டி.இ.எஸ்., பி.பி.ஓ., பயிற்சி, இணைய தொழில் நுட்ப பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
21 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்று, வேலைவாய்ப்பு வழிவகை செய்யப்படும். www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம், என்றார்.