ADDED : பிப் 25, 2024 05:44 AM
விருதுநகர், : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி மாணவர் சேவை மையம், மதுரை என்.எம்.எஸ்., ராஜா கே.எஸ்.பி., கணேசன் அகாடமி அமைப்பு இணைந்து மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கான விழிப்புணர்வு குறித்த சொற்பொழிவு கல்லுாரிச் செயலாளர் சர்ப்பராஜன் தலைமையில் நடந்தது.
முன்னாள் தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, அகாடமி நிர்வாகி மணிமாறன், கல்லுாரி முதல்வர் சாரதி பங்கேற்று பேசினர். தமிழ்த் துறை பேராசிரியர் செல்வசங்கரன் நன்றிகூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேவை பிரிவு டீன் நிர்மல் குமார், மாணவர் சேவைப்பிரிவு கூடுதல் டீன் பாண்டியராஜன் செய்தனர்.