ADDED : பிப் 24, 2024 05:53 AM

விருதுநகர் : விருதுநகரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஓய்வூதியர்கள், பணியில் உள்ள ஊழியர்களுக்கு உத்தரவாதம் வழங்காத, தொழிலாளர் பொறியாளர்களை பாதிக்க கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரன் பேசினார். மின் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.