சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் சிறப்பு நிதித்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
சிவகாசி மாநகராட்சியில் சிறப்பு நிதி திட்டம் 2025 -- 26 ன் கீழ் வார்டு எண் 1, 12, 15,19, 20, 22, 24, 45 பகுதிகளில் மண் ரோடுகளை பேவர் பிளாக் ரோடாக அமைக்கும் பணி ரூ. 49.11 லட்சத்திலும், வார்டு எண் 39, 45 பகுதிகளில் தார் ரோடு மேம்பாட்டு பணி ரூ. 28.50 லட்சத்திலும் நடைபெற உள்ளது.
இதற்கான பூமி பூஜைக்கு மேயர் சங்கீதா தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.