/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேர் இல்லாத மரம் போல் உள்ளது தி.மு.க., அரசு: கிருஷ்ணசாமி வேர் இல்லாத மரம் போல் உள்ளது தி.மு.க., அரசு: கிருஷ்ணசாமி
வேர் இல்லாத மரம் போல் உள்ளது தி.மு.க., அரசு: கிருஷ்ணசாமி
வேர் இல்லாத மரம் போல் உள்ளது தி.மு.க., அரசு: கிருஷ்ணசாமி
வேர் இல்லாத மரம் போல் உள்ளது தி.மு.க., அரசு: கிருஷ்ணசாமி
ADDED : செப் 14, 2025 03:43 AM
சாத்துார்:''தி.மு.க. அரசு சேதமடைந்த கோட்டை போல, வேரில்லா மரத்தை போல உள்ளது,'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
சாத்துார் எட்டூர் வட்டத்தில் அவர் கூறியதாவது:
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நத்தத்துப்பட்டி ஊராட்சியில் சேர்க்கப்பட்டு உள்ளது.இக்கோயில் இருக்கன்குடி ஊராட்சிக்கு சொந்தமானது.
எல்லை வரையறையை மாற்றி அமைக்க கோரி செப்.24ல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கோயிலில் பரம்பரை அறங்காவலர் குழுவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் உறுப்பினர்களாக்க வேண்டும். 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும் என விரும்புகிறோம். அப்போதுதான் அனைத்து மக்களுக்குமான சம நீதி கிடைக்கும்.
ஜனவரியில் நடைபெறும் எங்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்கு பிறகு கூட்டணி நிலை குறித்து அறிவிக்கப்படும்.
த.வெ.க., உள்ளிட்ட புதிய கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பது கூடாது. இதன் மூலம் அவை மேலும் வளர்ச்சி பெறும். தி.மு.க. அரசு சேதமடைந்த கோட்டை போல, வேர் இல்லாத மரத்தை போல எந்தப் பக்கம் சாயும் என்ற நிலையில் உள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இந்த அரசு தொடருமா என்பது தெரிய வரும் என்றார்.