/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயில்வே ஸ்டேஷன்களில் கோட்ட மேலாளர் ஆய்வு ரயில்வே ஸ்டேஷன்களில் கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில்வே ஸ்டேஷன்களில் கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில்வே ஸ்டேஷன்களில் கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில்வே ஸ்டேஷன்களில் கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : செப் 04, 2025 03:55 AM
சிவகாசி: சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் நிழற்குடை, லிப்ட், நவீன சுகாதார வளாகம், நடை மேடை உயர்த்துதல், குடிநீர், இருக்கை, மின்விசிறி ஓய்வு அறை உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இதனை ஆய்வு செய்ய நேற்று காலை 11:00 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வந்தனர்.
நுழைவாயில், ஓய்வு அறை, டிக்கெட் கவுன்டர், பார்க்கிங், பிளாட்பார்ம், டார்மென்டரி அறை உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். நுழைவாயில் ஆர்ச்சில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஊர் பெயர் மட்டுமே இருந்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் என்ற வார்த்தை இல்லாத நிலை இருந்தது. இதனை சரி செய்ய உத்தரவிட்டார்.
அப்போது எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் புனிதன் மனு அளித்தார்.