/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கோயில் நகரங்களில் இல்லை அடிப்படை வசதிகள் வருமானம் இருந்தும் செய்யாததால் சிரமத்தில் பக்தர்கள்கோயில் நகரங்களில் இல்லை அடிப்படை வசதிகள் வருமானம் இருந்தும் செய்யாததால் சிரமத்தில் பக்தர்கள்
கோயில் நகரங்களில் இல்லை அடிப்படை வசதிகள் வருமானம் இருந்தும் செய்யாததால் சிரமத்தில் பக்தர்கள்
கோயில் நகரங்களில் இல்லை அடிப்படை வசதிகள் வருமானம் இருந்தும் செய்யாததால் சிரமத்தில் பக்தர்கள்
கோயில் நகரங்களில் இல்லை அடிப்படை வசதிகள் வருமானம் இருந்தும் செய்யாததால் சிரமத்தில் பக்தர்கள்
ADDED : ஜன 08, 2024 05:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் போதிய இடமிருந்தும், வருமானமிருந்தும் பக்தர்களுக்கு போதிய அளவிற்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களுக்கு பல ஆயிரம் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதிகாலை ஸ்ரீவில்லிபுத்துார் வரும் வெளிமாநில, மாவட்ட பக்தர்களுக்கு இயற்கை உபாதையை கழிக்க, குளிக்க சுகாதார வளாக வசதிகள் இல்லை. இதனால் ஆண், பெண் பக்தர்கள், குழந்தைகள் சுகாதார வளாகங்கள் எங்கு உள்ளன என தேடி அலைகின்றனர்.
இதே போல் சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனிலும், கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, வத்திராயிருப்பு போன்ற இடங்களிலும் சுகாதார வளாக வசதி இல்லாமல் திணறுகின்றனர்.
இதே நிலை தான் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும். இதில் இக்கோயில்களுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் இருந்தும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் திட்டங்கள் எதையும் அறநிலையத்துறை செய்யவில்லை.
ஒவ்வொரு கோயிலிலும் உண்டியல், கடைகளின் வாடகை, சிறப்பு தரிசன கட்டணம் , பார்க்கிங் குத்தகை என பல வகையில் அறநிலையத்துறைக்கு வருமானங்கள் இருந்தும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர அறநிலையத்துறை அதிகாரிகள் மனமில்லாமல் இருக்கின்றனர்.
கேரளாவில் பல லட்சம் பக்தர்கள் வரும் சபரிமலையில் பம்பை முதல் கோயில் வரை பல இடங்களில் சுகாதார வளாகங்கள், குடிநீர் வசதிகள், செல்லும் வழியில் மண்டபங்கள் ஆகியவற்றை தேவசம் போர்டு செய்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் சில ஆயிரம் பக்தர்களே வரும் சதுரகிரி கோயில், ஆண்டாள் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களில் போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை.
இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்து கோயில் நகரங்களில் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அதிகளவில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தரும் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.