/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம் அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
பராமரிப்பு அவசியம்
ஜனார்த்தனன், விவசாயி: பெரிய புளியம்பட்டி கண்மாயில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும். கண்மாயை சுற்றி எனக்கு சொந்தமான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கண்மாயில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றியும், கரைகளை உயர்த்தி பலப்படுத்த வேண்டும்.
பயன் இல்லை
தசரதன், விவசாயி: பெரிய புளியம்பட்டி கண் மாயை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். மழைக்காலத்தில் கூட போதுமான அளவில் தண்ணீர் நிறைவது இல்லை. கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடைகள் பராமரிப்பு இன்றி அடைபட்டு போய் உள்ளது. கண்மாய் இருந்தும் தண்ணீர் இல்லாமல் நாங்கள் மானாவாரி விவசாயம் தான் செய்து வருகிறோம். அரசு கண்மாயை துார் வாறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பன்றிகளின் புகலிடம்
அழகர்சாமி, விவசாயி: பெரிய புளியம்பட்டி கண்மாய் பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால், காட்டுப்பன்றிகள் வசிக்கும் இடமாக மாறிவிட்டது. கண்மாய்க்கு அருகில் உள்ள நிலங்களில் புகுந்து பயிர்களை பாழாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பன்றிகள், மான்களால் விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சம்பாதித்து வருகின்றனர். பன்றிகளை விரட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.